Monday, 11 March 2024

கண்ணகி பற்றிய வரலாறு சிலப்பதிகாரம் கதைச்சுருக்கம்

 கண்ணகி பற்றிய வரலாறு [அ] சிலப்பதிகாரம் கதைச்சுருக்கம்



“மதுரையை எரித்த கண்ணகி” என்று சிலப்பதிகாரத்தில் வரிகள் இடம் பெற்று இருக்கும் ஆம் சிலப்பதிகாரத்தின் தலைவன் தலைவி என்றால் அது கோவலனும் கண்ணகி மட்டுமே. கோவலனின் மனைவியான கண்ணகி அவளது சிறந்த ஒழுக்கத்தினாலும் மற்றும் கற்பின் இலக்கணமாகவும் பத்தினி பெண்களின் அடையாளமாக திகழ்ந்தவர்.

ஒரு பெண்ணின் தைரியம், ஆற்றல், ஆளுமை மற்றும் திறன் ஆகிய மொத்த பண்பிற்கும் அடையாளமாக வாழ்ந்தவள் இந்த கண்ணகி. தனது ஆசை காதல் கணவன் தப்பே செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதால் மதுரை முழுவதும் முற்றிலுமாக எரித்த கண்ணகி என காப்பியங்களில் அறியப்பட்ட கண்ணகி பற்றிய விவரங்களின் தொகுப்பே இந்த பதிவு.

ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது இந்த சிலப்பதிகாரம் இதனை எழுதியவர் இளங்கோவடிகள். சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் சிலம்பின் மூலம் உருவான படைப்பு என்பதனால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது.

கோவலன் கண்ணகி திருமணம் :

கோவலன் காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் ஆவான். அவனது தந்தை பெரிய வணிகர் என்பதால் செல்வச்செழிப்பிற்கு குறைவில்லாமல் வளர்கிறான் கோவலன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி இவளும் நல்ல பொருளாதாரம் மிகுந்த ஒரு வீட்டிலே வளர்ந்தவள்.

இவர்கள் இருவருக்கும் இவர்களது பெற்றோர்கள் முடிவு செய்து திருமணத்தினை நடத்தி வைக்கின்றனர். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அது இதுவரை என்றால் மாதவி கோவலனின் வாழ்வில் வராத வரையில். கோவலனின் வாழ்வில் மாதவி வந்ததும் அவன் கண்ணகி விட்டு விலகினான். அதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை படியுங்கள்.

கோவலன் தடம் மாறிய தருணம் :

கோவலன் கண்ணகி இருவரும் தங்களது இல்லற வாழ்வில் சந்தோஷமாகவே இருந்தனர். இருந்த போதும் கோவலன் சிறுவயது முதல் ஒரு இசை பிரியன் அவனுக்கு பல இசைக்கருவிகளை வாசிக்க கூட தெரியும். இசையினை மட்டுமல்லாது அவனுக்கு கலை என்றாலே பிடிக்கும். அதனால் இவனுக்கு அனைத்து கலைகளையும் ரசிக்கும் பழக்கமும் இருந்தது.

இந்நிலையில் தான் கோவலன் ஒரு முறை பூம்புகாரில் ஒரு ஆடல் அரசி [நடனமாடுபவள்] மாதவி என்பவளை சந்திக்கிறான். அவளின் நடனம் கோவலனுக்கு பிடிக்கவே அவளுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டான். கோவலனின் ஆசைக்கு இணங்கிய மாதவி கோவலனுடன் ஒரே வீட்டில் இணைந்து வாழ ஆரம்பித்தாள். இந்தச்சமயத்தில் தான் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வந்து மாதவியுடன் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தான். கண்ணகியோ தனது கணவன் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் தன் கணவன் இருப்பதனை நினைத்து மிகுந்த வருத்தத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிறாள் . தனது கணவன் பிரிந்து சென்றதும் அவனை பற்றி தப்பாக நினைக்காமல், யாரை பற்றியும் பழிகூற நினைக்காமல் எப்படி கோவலனுடன் நாம் ஒன்று சேர்வது என்று மட்டுமே கண்ணகி சிந்தித்தால்.

செல்வத்தினை இழந்த கோவலன் :

மாதவியுடன் ஒரே இல்லத்தில் தங்கி இருந்த கோவலன் மாதவி மீது தீரா மோகத்தில் இருந்தான். இதன் காரணமாக மாதவி எதை கேட்டாலும் தயங்காமல் அனைத்தையும் செய்தான். கோவலன் மாதவியுடன் இருக்கும் போது கோவலனுக்கு தனது சுயஅறிவு மங்கிய நிலையில் இருந்தான் என்றே கூறவேண்டும். இதனை பயன்படுத்திய மாதவி கோவலனிடம் இருந்த செல்வங்க கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினால். கடைசியில் அனைத்து செல்வத்தினையும் மாதவியிடம் பறிகொடுத்தான் கோவலன். இந்நிலையில் மாதவி கோவலனனிடம் இருந்து சற்று விலக ஆரம்பித்தாள். இதனை நன்கு உணர்ந்து இருந்தான் கோவலன்.

மீண்டும் கண்ணகியுடன் இணைந்த கோவலன் :

செல்வத்தினை இழந்த சிறிது காலத்தில் கோவலனுக்கு மாதவி மீது இருந்த ஈர்ப்பு போக அவன் மீண்டும் கண்ணகியிடம் தஞ்சம் அடைந்தான். வேறொரு பெண்ணிடம் இருந்துவிட்டு தன்னிடம் மீண்டும் திரும்பி வந்த தன் கணவனை அவள் ஒரு வார்த்தை கூட நடந்தவைகளை பற்றி கேட்கவில்லை . அந்த அளவிற்கு கோவலன் மீது கண்ணகி அன்பு வைத்திருந்தாள். தன் மனைவியிடம் திரும்பி வந்த கோவலன் அவளை பார்த்து மனம் நொந்தான் . மேலும் அவளது கைகளை பற்றி எனது முழு செல்வத்தினையும் நான் தற்போது இழந்துவிட்டேன். ஆகவே நாம் மதுரை சென்று செல்வத்தினை ஈட்டுவோம் என்று தன் மனைவியிடம் கண் கலங்கினான். இதனை கேட்ட கண்ணகி என்ன ஆனாலும் நான் உங்களுடன் தான் இருப்பேன். நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம் என்று கூறி தனது கணவருடன் மதுரை நோக்கி புறப்பட்டாள்.

கண்ணகி காற்சிலம்பின் மதிப்பு :

கண்ணகியும் கோவலனும் மதுரை வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களிடம் சுத்தமாக காசு இல்லை. எனவே தான் அணிந்து இருந்து மாணிக்கத்தால் ஆன காற்சிலம்பினை கோவலனிடம் கொடுத்து அதனை விற்று பணம் வாங்கி வரும்படி கூறினால். மாணிக்கத்தின் ஒரு கல்லே பல ஆயிரங்கள் போகும். அதிலும் கண்ணகி காலில் அணிந்து இருந்த சிலம்பு முழுவதும் மாணிக்கத்தால் ஆனவை. ஆகையால் அதன் விலைமதிப்பு கணக்கிடமுடியாத அளவிற்கு இருக்கும்.

அந்த காற்சிலம்பினை எடுத்துக்கொண்டு அதனை விற்பதற்காக கடைவீதியினை நோக்கி நடந்தான் கோவலன்.

அரசியின் காற்சிலம்பினை திருடிய பொற்கொல்லன் :

அந்த சமயத்தில் மதுரையை ஆண்ட மன்னனின் மனைவியின் காற்சிலம்பினை அந்த அரசவை பொற்கொல்லன் திருடினான். அதே சமயத்தில் கோவலன் காற்சிலம்பினை விற்க கடைவீதியினை நோக்கி வந்ததால் இதனை தனக்கு சாதகமாக்கி அரசியின் காற்சிலம்பினை கோவலன் தான் திருடினான் என்று அரசரிடம் பொய் கூறினான்.

கோவலன் தண்டனையால் கொல்லப்படுதல் :

கோவலனை காற்சிலம்புடன் அரண்மனைக்கு அழைத்து வந்த அரண்மனை காவலாளிகள் கோவலனை அரசனின் முன்பு நிற்க வைத்தனர். அப்போது கோவலன் இந்த காற்சிலம்பு என் மனைவி கண்ணகி உடையது. நாங்கள் அனைத்து செல்வத்தினையும் இழந்து மனவருத்தத்தோடு எங்களது இடத்தில் இருந்து கிளம்பி செல்வம் ஈட்ட மதுரை வந்துள்ளோம். இந்த காற்சிலம்பு அரசியோடையது அல்ல என்று கூறினான். அதனை ஏற்க மறுத்த அரசன் விசாரணை ஏதும் செய்யாமல், அதிலுள்ள உண்மையினை ஆராயாமல் கோவலனை கொலை செய்யும்படி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி கோவலன் கொல்லப்பட்டான்.

கண்ணகியின் ருத்ர தாண்டவம் :

கோவலன் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகியின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. அதோடு கோவம் அனலாய் இருந்தது அவள் அக்னிகுழம்பு போன்று தன்னுடைய மற்றொரு காற்சிலம்பினை எடுத்துக்கொண்டு அரண்மனையினை நோக்கி விரைந்தாள்.

அரசவை அடைந்த கண்ணகி அரசன் முன்பு நின்று எந்த விசாரணையும் இன்றி என் கணவனை கொன்றது தவறு என்று சீறினாள். மேலும் தனது மற்றொரு காற்சிலம்பினை உடைத்து அதில் மாணிக்க கற்கள் இருப்பதை அரசருக்கு காண்பித்தாள். அரசியின் காற்சிலம்பில் முத்துக்கள் மட்டுமே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா..? என் கணவன் கைகளில் இருந்த காற்சிலம்பினை கொண்டுவந்து உடைத்து பாருங்கள் அதில் மாணிக்க கற்களே இருக்கும் என்று தனது கோவத்தில் அரசனை நோக்கி முறையிட்டாள். பிறகு அவள் கூறியவாறே கோவலனின் கைகளில் இருந்த காற்சிலம்பினை உடைத்து பார்க்கையில் அதில் மாணிக்க கற்களே இருந்தன. இதனை கண்டு அரசனும் , அரசியும் அதிர்ச்சி அடைந்தனர். தான் தவறான தீர்ப்பினை வழங்கி விட்டேன் இப்போதே என் உயிர் பிரியட்டும் என்று கூறி கீழே விழுந்த மன்னர் இறந்தார். என் கணவன் இல்ல உலகில் நான் இருக்க கூடாது என்று அரசன் அருகில் விழுந்து அரசியும் தன் உயிரை விட்டாள்.

மதுரையை சாம்பலாக்கிய கண்ணகி :

அரசனும் அரசியும் இறந்தும் கண்ணகியின் கோவக்கனல் தனியவில்லை. கற்புக்கு பேர்போன பத்தினி என்பதனால் அவள் விடும் சாபம் பலிக்கும் என்பதனை அறிந்த கண்ணகி என் கணவருக்கு அநியாயம் இழைத்த இந்த மதுரை நகர் முழுவதும் தீக்கு இரையாகட்டும் இன்று சாபமிட்டாள். பத்தினி விட்ட சாபம் பலித்தது அவளின் சொல்ப்படி மதுரை நகர் முழுவதும் கொழுந்து

மீண்டும் கோவலனிடம் சென்ற கண்ணகி :

மதுரையை எரித்துவிட்டு அழுதுகொண்டே சித்தபிரம்மை இல்லாதவள் போன்று நடக்க ஆரம்பித்த கண்ணகி நடந்து நடந்து அவளது தாமரை பொற்பாதங்கள் முழுதும் குருதியில் நனைந்தன. கடைசியில் தற்போதைய கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியான “இடுக்கி” என்கின்ற மலை பிரதேசத்தினை அடைந்தாள். அங்கு குறவர்களிடம் தனக்கு நடந்த அநீதியினை கூறி அழுதாள். மேலும் சில காலம் அவர்களுடனே இருந்து தன் மரணத்திற்காக காத்திருந்தாள். அப்போது ஒரு நாள் தேவர் உலகில் இருந்து நிலவின் வழியே கோவலன் வந்து கண்ணகியை அங்கிருந்து கூட்டிச்சென்றதாக ஒரு குறிப்புள்ளது. மேலும் கோவலன் கண்ணகியை மீட்டு சென்ற இடத்தில் இன்றளவும் ஒரு கோவில் உள்ளது அதில் கடவுள்களாக கோவலனும் கண்ணகியும் இருக்கின்றனர். வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்திரா பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு இவர்களை தரிசிக்க மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.


Tuesday, 4 May 2021

சியோமி ரெட்மி நோட் 10 எஸ்  (xiaomi rendmi note 10S in India) அறிமுக தேதி!

ரெட்மி நோட் 10 எஸ் மே 13 அன்று இந்தியாவில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரெட்மி நோட் 10 எஸ் கடந்த மாதம் உலகளவில் வெளியிடப்பட்டது. ரெட்மி நோட் 10 எஸ் மே 13 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமி டுவிட் செய்துள்ளது. வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளுடன் ஆன பாக்ஸ் புகைப்படத்தை நிறுவனம் வெளியிட்டது. கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளுடன் இது மாடல் ஒத்துப்போகிறது

சியோமி முன்னதாக இந்தியாவில் ரெட்மி நோட் 10 தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அது ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் ரெட்மி நோட் 10 எஸ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, எம்ஐயூஐ 12.5இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, டார்க் ஆஷ், வைட் என்ற மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. கேமிங் சாதனம் என மையமாக வைத்து இது டீஸ் செய்யப்பட்டுள்ளது. விவரக்குறிப்புகள் பொறுத்தவரை இது சூப்பர் டிஸ்ப்ளே, ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுகளோடும் 

அதேபோல் இதன் கூடுதல் விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் எம்ஐயூஐ 12.5 உடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED பஞ்ச் துளை டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்
மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் 
என எதிர்பார்க்க படுகிறது 


Friday, 19 October 2018

அய்யப்பனின் மேல் பெண் கொண்ட காதல் கதை!

சபரி மலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு, இந்த கோவிலுக்கு விரதம் இருந்து வருடா வருடம் கார்த்திகை மாதம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த மாதிரியான விரதம் வேறெந்த கோவிலிலும் இந்தியாவில் கடைபிடிக்கப்படுவதில்லை. இது மிக வித்தியாசமானதாகும். அதுமட்டுமில்லாமல், இந்த அய்யப்பன் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். இந்த கோவிலுக்கு அருகே இன்னொரு கோவில் அமைந்துள்ளது. அது மாளிகைபுரம் தேவி கோவில் என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் கேரளத்தை புரட்டி போட்டது. இது அய்யப்பனின் கோபம் என பக்தர்கள் சிலர் பேசிக்கொண்டனர். உண்மையில் இன்னொரு விசயம் இந்த இடத்தைப் பற்றி உள்ளூர் வாசிகளால் நம்பப்பட்டு வருகிறது. அது ஒரு பெண்ணின் கோபம். யார் அந்த பெண். அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

சபரி மலை மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இங்குதான் இந்த சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.

அய்யப்பனின் வரலாற்றையும் கோவிலின் புனிதத்தையும் பற்றி தெரிந்துகொண்ட நமக்கு, இந்த பெண்ணைப் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது உள்ளூர் மக்கள் செவி வழியாக சொல்லும் வரலாறு. சொல்லப்போனால் தொன்னம்பிக்கை. யார் அந்த பெண். அய்யப்பனுக்கு அருகேயே அதிகநாள்கள் இருந்துவரும் அந்த பெண்ணுக்கும், கோவிலுக்குள் ஏன் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

மாளிகைபுரம் தேவி கோயில் எனப்படும் இந்த அம்மன் கோயில் ஐயப்பன் கோயிலில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு சிறு குன்றில் வீற்றுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வலப்புறத்திலுள்ள இந்த கோயிலுக்கு செல்லும்போதே சாரல் நிரம்பிய மலைக்காற்றும் இனிமையான சூழலும் நம்மை தழுவுகின்றன.

ஐயப்பன் மற்றும் மாளிகைபுரத்து அம்மன் ஆகிய இரண்டு கடவுள்கள் சம்பந்தப்பட்ட பல புராணக்கதைகள் இந்த கோயிலில் பின்னணியில் சொல்லப்படுகின்றன. அதாவது ஐயப்ப கடவுள் மகிஷி எனும் அசுரகணத்தை வதம் செய்து கொன்றபோது அதன் உடற்பாகங்களிலிருந்து ஒரு அழகிய கன்னி வெளிப்பட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனை வேண்டியதாகவும், பிரமச்சரிய நோக்குடன் அவதாரம் எடுத்திருந்த ஐயப்பன் அதற்கு மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த பெண் அவதாரம் ஐயப்பனின் அருகிலேயே இருக்க வேண்டி மாளிகை புரத்து அம்மனாக ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே குடிகொண்டுவிட்டதாக ஐதீகக்கதை கூறுகிறது.

பகவதி சேவை எனும் பிரசித்தமான சடங்கு இக்கோயிலில் செய்விக்கப்படுகிறது. கண் மை, பட்டுப்பாவாடை, குங்குமம், வளையல் போன்றவை இந்த சடங்கின்போது பக்தர்களால் காணிக்கையாக மாளிகைப்புரத்து அம்மனுக்கு அளிக்கப்படுகிறது.

நாகதேவதைகளுக்கான சிறிய சன்னதிகளையும் இந்த கோயில் வளாகத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம். தேங்காய் உருட்டு எனும் தனித்தன்மையான சடங்கும் பக்தர்களால் மாளிகைபுரத்து அம்மன் கோயிலில் செய்விக்கப்படுகிறது.

ராமாயண காவியத்தில் இடம்பெற்றுள்ள ‘சபரி’ எனும் கதாபாத்திரத்தின் பெயரையே இந்த தெய்வீக மலைப்பகுதி ஏற்றுள்ளது. பத்தனம் திட்டா மாவட்டத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்த மலைப்பிரதேசத்தின் காடுகள் பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவின் இயற்கை எழிலுக்கான சான்றாகவே இந்த சபரிமலை பிரதேசம் புகழ் பெற்றுள்ளது. ஐயப்ப பஹவான் அல்லது ஸ்வாமி ஐயப்பன் எனும் விசேஷமான கடவுள் இங்கு குடிகொண்டுள்ளார்.

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் 41 நாட்களுக்கு புலால் மறுத்து, ரோமம் மழித்தல் தவிர்த்து, புலனடக்கம் மேற்கொண்டு, காலை மாலை பூஜைகள் புரிந்து, கறுப்புடை தரித்து மற்றும் நல்லொழுக்கம் பேணி, கடும் விரதத்திற்குப்பின்னர் இந்த கோயிலுக்கு நடந்தே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலின் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு முக்கிய காரணம்தான் அய்யப்பன் பிரம்மச்சரியம் கடைபிடிப்பதாக கருதுவது. சிலர் பெண்களை அனுமதிக்கக் கோரி போராடி வருகின்றனர். அப்படி அனுமதி கொடுத்ததனால்தான் வெள்ளம் வந்துள்ளதாக சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அப்படி பார்க்கையில் பெண்களை அனுமதித்தனால்தான் அய்யப்பன் கோபம் கொண்டார் எனவும் நம்பப்படுகிறது.

சபரி மலை நோன்பு, விரதம் என்பது முற்காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகள். முன்னதாக இந்த கோவிலுக்கு செல்ல வாகன வசதிகள் எல்லாம் செய்யப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக, காட்டு பாதையில் செல்லவேண்டியிருந்தது. இதனால் ஆண்களுக்கே சில சமயம் பாதுகாப்பில்லை. அப்படி இருக்கையில் மாதம் ஒரு முறை மாதவிடாய் வரும் பெண்கள் மிகவும் அவஸ்தை படுவார்களே. அவர்களின் மாதவிடாய் கழிவிலிருந்து வரும் நாற்றம் விலங்குகளை வசப்படுத்திவிடும். இதனாலேயே அந்த கோவிலுக்குள் பெண்கள் வரவேண்டாம் என சொல்லப்பட்டிருந்தது. இதுவே நாளடைவில் ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது என்று விளக்கம் தெரிவிக்கின்றனர் இந்த கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி போராடுபவர்கள். நீங்களே சொல்லுங்கள்.. மாதவிடாய் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் பெண்களை அனுமதிக்கலாமா? இல்லை கூடவே கூடாதா?

வவுனியாவில் பத்து மாதத்தில் இத்தனை பேர் தற்கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

வவுனியா செட்டிக்குளத்தில் தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து, தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண்ணிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராயப்பட்டு வருவதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் 22 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- “வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 13 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையப் பிரிவுகளில் கடந்த பத்து மாதங்களில் 22 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பத்துப் பேர் பெண்கள். பன்னிரண்டு பேர் ஆண்கள். இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் இளவயதினர். தற்கொலைக்கு இன்னொரு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விச மருந்துகள். இதில் செட்டிக்குளம் பகுதியில் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து விட்டு தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஸ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினார்கள்.

எங்களிற்கு ஆச்சரியமாக இருந்தது 14,15,16 வயது சிறுவர்களும் தற்கொலை செய்கிறார்கள். 21 முதல் 25 வயதிற்கிடைப்பட்ட எட்டுப் பேர் தற்கொலை செய்துள்ளனர். 31 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்ட ஏழு பேர் தற்கொலை செய்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்துகொள்பவர்கள் எவருடனாவது பேச முயற்சிக்கிறார்கள். அதன் பின்னரே தற்கொலைக்கு முயன்று வருகிறார்கள். உங்களிற்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பொலிஸ் நிலையங்களிற்கு வந்து உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவரும் எமது பிள்ளைகள் என்று நினைத்தே கடமையாற்றி வருகிறோம். எனவே இளவயதினர், உங்கள் தாய், தந்தையராக நினைத்து எம்முடன் கலந்துரையாடுங்கள். உங்கள் பிரச்சனைகளை மனம்விட்டு பேச முன்வர வேண்டும். உங்களிற்கு ஏதும் சுகவீனம் இருந்தால் வைத்தியரிடம் சென்று சொல்ல வேண்டும். அதேபோல ஏதும் பிரச்சனைகள் இருந்தால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சொல்ல வேண்டும்.

முன்னர் தற்கொலை செய்ய முயன்றால் தண்டப்பணம் செலுத்த வேண்டும். இப்போது அப்படியில்லை. இதனாலேயே பலர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். செட்டிக்குளத்தில் பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம்“ என்று தெரிவித்தார்.

Tuesday, 10 July 2018

சுற்றுலா சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்


அம்பாறை – தமன – எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன நான்கு பேரில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள், பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 09 பேர், அம்பாறை, தமன எக்கல் ஓயவில் படகில் சென்றுள்ளனர்.
இதன்போது படகு கவிழந்து வித்துக்குள்ளானதில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்கள் ஐந்து பேரை காப்பாற்றிய போதிலும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர், காவலர் மற்றும் மாணவர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.