Wednesday, 18 February 2015

Vantharumoolainews

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அன்மையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவரவதாவது;

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரை பயன்படுத்தி பல்கலைகழகத்திற்குள் இருப்பவர்களை சிலர் அவமானப்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாக இன்று கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தள்ளனர்.இது குறித்து கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் வெளியிட்டள்ள அறிக்கையிணை கீழே இணைத்துள்ளோம்

அன்பார்ந்த பொது மக்களே! புத்திஜீவீகளே! மாணவ, மாணவிகளே!

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது யாருடைய தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவோ மழுங்கடிக்கவோ முன்னெடுக்கப்பட்ட தொன்றல்ல.

சகலருக்கும் தெரியும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு எமது  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் உபவேந்தர் பதவியிலும் மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒரு பகுதியினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி இன்ரநெட், பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்கள் அறியாத விடயமன்று. இருப்பினும் கடந்த 09.02.2015 அன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற பல்கலைக்கழக சமூகமும் பொது மக்களும் என்ற போர்வையில் முன்னெடுத்து செல்லப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் சகலரையும் திரும்பிப் பார்க்க செய்ததை யாவரும் அறிவீர்கள்.

பல்கலைக்கழக சமூகம் என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இருப்பினும் 329 அங்கத்தவர்களை கொண்ட எமது ஊழியர் சங்கமானது அதில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவிடத்து பல்கலைக்கழக சமூகம் என்ற பதத்தினை பாவித்ததானது பல்கலைக்கழகத்தில் பொறுப்புள்ள சங்கம் என்ற வகையில் எமக்கு விசனமளிகின்றது.

அத்தோடு அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எமது மனக்கசப்பினை காட்டுவதற்கும், அநாகரீகமான முறையில் எழுதப்படும் மொட்டை கடிதங்களுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாகவும்  இன்றைய இந்த கறுப்பு பட்டி அணிந்த மௌன போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டியவர்கள் பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் “காமுகர்களிடமிருந்து எமது பெண்களை காப்பாற்று” போன்ற சுலோகங்களை ஏந்தி கூறியமையானது கிழக்கின் சொத்தென கூறும் எமது பல்கலைக்கழகத்தையும் அங்கு பணியாற்றும் கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பெண் ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகள் என்ற அனைவரையும் வெளிச்சமூகத்தில் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு பார்க்கவைக்கும் என்பதை கூறிக்கொள்வதோடு இவ்வாறான செயற்பாடுகளில் “பல்கலைக்கழக சமூகம்” என்ற பதத்தினை பயன்படுத்தியமைக்கும் எமது ஊழியர் சங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதையும் கூறி இவ்வாறான செயலிற்கு நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.

மேலும் 30வருடகால யுத்தத்தின் பின்னர் நிறைவேற்று அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு சகல நடவடிக்கைகளும் சீர்செய்யப்பட்டு நிதிப் பிரமாணங்களுக்கும் சட்டதிட்டங்களுக்கும் ஏற்ப வெளியிலுள்ள சில திணைக்கள தலைவர்களையும் உள்ளடக்கிய ஒரு அங்கிகரிக்கப்பட்ட குழுவினால் சகல விலை மனுக்கோரல்களும் இடம்பெற்றே பொருள் கொள்வவனவு இடம்பெறுகின்றது. எனவே ஊழல்கள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எமது சங்கமும் பல்கலைக்கழக சமூகம் என்ற ரீதியில் அதற்கெதிராக குரல் கொடுப்போம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

எமது பல்கலைக் கழகத்தற்தின் வளர்ச்சியை முடக்கும் வகையில் ஒரு சிலரால் உபவேந்தரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தியும் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்களையும் எமது சங்கத்தை பொறுப்புள்ள வகையில் கொண்டு செல்லக்கூடிய எமது சங்க நிருவாகிகளுக்கும் தனிப்பட்டரீதியில் அவர்களது பெயரைக்குறிப்பிட்டு கையாலாகாத்தனமாக இன்ரநெட்களிலும் மொட்டைக் கடிதங்களிலும் அநாகரிகமான முறையில்; இழிவுபடுத்தி எழுதுபவர்களை அவற்றை எழுதுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வதோடு அதனை வன்மையாகவும் கண்டிக்கின்றோம்.

மற்றும் நாம் எந்த தொழில்சங்கத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.
எமது சங்கத்திற்கும் உபவேந்தர் மற்றும் நிருவாகத்தினருடனும் முரண்பாடுகள் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் சுமுகமாகவும் புத்தி சாதுரியமாகவும் அவர்களுடன் பேசி எமது பிரச்சனைகளை அவ்வப்போது முடிவுறுத்திக் கொள்வோம். அதே போன்று கடந்த காலங்களில் பதவி வகித்துச்சென்ற உபவேந்தர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டனர் என்ற சரித்திரம் எமது சங்கத்திற்கு கிடையாது. 

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் யார் உபவேந்தராக பதவி வகித்தாலும் குறிப்பிட்ட தனிமனிதருக்கென்றல்லாது அக்காலங்களில் பதவி வகித்துச் சென்ற உபவேந்தர்களுக்கு எமது சங்கம் முழு ஆதரவினையும் வழங்கி வந்தது. இதை யாரும் மறுக்கமுடியாது. அதே போன்று தற்போதும் எமது சங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இனிமேலும் வழங்குவோம் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்(செய்தி-www.battinews.com/).

No comments:

Post a Comment