மன்மத வருட சிறப்புகள் பலன்கள்
உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஆண்டுகள் எண்களின் அடிப்படையில் தான் அறியப்படுகிறது. ஆனால் தமிழில் மட்டுமே ஆண்டுகளுக்கு பெயர்கள் வழங்கப்படுகிறது. தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உண்டு. சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆங்கில தேதியில் சுமார் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு நிகழும். இவ்வாண்டு 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இவ்வாண்டு பிறக்கும் தமிழ் ஆண்டானது தமிழ் ஆண்டுகளின் வரிசையில் இருபத்து ஒன்பதாவது வருடம் ஆகும். இப்புத்தாண்டின் பெயர் மன்மத வருடம் ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் இடைக்காட்டுச் சித்தர் எழுதிய பாடல்களைக் கொண்டு அந்த வருடத்தின் பலன் அறியப்படுகிறது.
மன்மத வருடத்திய வெண்பா மன்மதத்தின் மாரியுண்டு வாழமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளும் நண்ணுமே – மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் காண் இதன் பொருள் என்னவென்றால் மன்மத வருடத்தில் நல்ல மழையுண்டு. எல்லா உயிரினங்களும் நன்றாக சுகமாக வாழும். நன்மைகள் அதிகரிக்கும். எல்லாவிதமான பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் மேலும் அவை எளிதாகக் கிடைக்கப் பெறும். சீனாவில் அரசாளும் அதிகார வர்க்கத்தினரால் சண்டை சச்சரவு உண்டாகும். தெற்கு திசையிலிருந்து அதிகமாக காற்றடித்து காட்டுப் பயிர்களின் விளைச்சல் குறையும்.
மன்மத வருடப் பிறப்பன்று உள்ள கிரக நிலை பின்வருமாறு:
மன்மத வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி – 14-04-2015 செவ்வாய் கிழமை கிருஷ்ணபட்சம் தேய்பிறை தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் சுபம் நாமயோகம் பத்திரை கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 01-47 மணியளவில் சிம்மம் லக்கினத்தில் மன்மத வருடம் பிறக்கிறது.
மன்மத வருடத்தின் பொது பலன்கள்
வருடப் பிறப்பின் லக்கினம் சிம்மம். லக்கினாதிபதி சூரியன் ஒன்பதாவது வீட்டில் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவகத்திற்கு அதிபதியான செவ்வாயுடனும் தன லாபாதிபதி புதனுடனும் சேர்க்கை பெற்று பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே இவ்வாண்டு நாட்டில் தெய்வீக நம்பிக்கை அதிகமாகும், பொருளாதாரம் சிறக்கும், மருத்துவம், இயந்திரம் வணிகம் மற்றும் தொலைதொடர்பு போன்ற துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். லக்கினம் சனியின் பார்வை பெறுவதால் நாட்டின் மேற்கண்ட பலன்கள் சற்று தாமதமாக நடைபெறும்.
தனிநபர்களின் வருமானம்
இரண்டாம் வீட்டிற்குறிய புதன் லக்கினாதிபதி சூரியனுடனும் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவகத்திற்கு அதிபதியான செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சமம் பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே பாரம்பரிய கலைகள் வளர்ச்சி பெறும் தனிமனித வருமானம் அதிகரிக்கும். குடும்பஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு அமர்ந்து கேது பார்வை பெறுவதால் குடும்பத்தில் குழப்பங்கள் பிரிவினைகள் அதிகரிக்கும்.
தொழில் விருத்தி
மூன்றாம் வீட்டிற்குறிய சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் தொழில் விருத்தியடையும், புதுவிதமான ஆடம்பரப் பொருட்களின் பயன்பாடும் ஆடம்பரமும் அதிகரிக்கும். சுக்கிரன் சனி மற்றும் கேது பார்வை பெற்று இருப்பதால் பொன்னகைகளின் திருட்டு அதிகரிக்கும்.
நீர்நிலைகள் நிறையும்
நான்காம் வீட்டிற்குறிய செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் லக்கினாதிபதி சூரியன் தன லாபாதிபதி புதன் ஆகியோருடன் கூடி ஆட்சி பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே புதுவிதமான மாடமாளிகைகள் வாகனங்கள் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும் கல்விதுறை மேன்மையடையும். நான்காமிடத்தில் வக்கிர சனி இருந்து நான்காமிடம் செவ்வாய், ராகு மற்றும் குரு பார்ப்பதால் நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகரிக்கும் விவசாயம் செழிப்பு பெறும் ரியல் எஸ்டேட் வியாபாரம் மந்தமாகும். வாகன விபத்துகளும் அதிகரிக்கும்.
சுற்றுலாத்துறை வளர்ச்சி
ஐந்தாம் வீட்டிற்குறிய குரு பன்னிரெண்டாமிடத்தில் உச்சம் பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே நம் நாட்டின் பாரம்பரிய கலைகளுக்கு வெளிநாட்டில் வரவேற்பு அதிகரிக்கும் உயர்கல்வி மேன்மை பெறும். குரு சந்திரன் யோகம் இருப்பதால் சுற்றுலா துறை வளர்ச்சியடையும். குருவுக்கு செவ்வாய் மற்றும் ராகுவின் பார்வை இருப்பதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும் மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் திருடப்படும் அபாயமும் உண்டு.
புதுவகை நோய்கள்
ஆறாம் வீட்டிற்குறிய சனி நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, சுக்கிரன் மற்றும் குருவின் பார்வைபெற்று பகை நிலையில் நிற்கிறார் மேலும் ஆறாமிடத்தை கேது பார்க்கிறார். எனவே ரசாயனப் பொருட்கள் மற்றும் புது வகை கிருமிகளால் புது வகை நோய் பரவும் அபாயமுண்டு. ஆறாமிடத்தில் சந்திரன் இருப்பதும் சுக்கிரன் சனியை பார்ப்பதும் குரு ஆறாமிடத்தையும் ஆறாமிடத்து அதிபதி சனியையும் பார்ப்பதால் எந்த நோயானாலும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோய்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். நோயின் பாதிப்புகள் பெரிதாக இருக்காது.
தம்பதிகள் பிரச்சினை
ஏழாம் வீட்டிற்குறிய சனி நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, சுக்கிரன் மற்றும் குருவின் பார்வைபெற்று பகை நிலையில் நிற்கிறார். எனவே காதல் திருமணங்கள் அதிகம் நடைபெரும். நீண்ட காலம் தடைபட்ட திருமணம் கைகூடிவரும். தம்பதிகளுக்கிடையே பிரச்சினைகளும் பிரிவினைகளும் அதிகரிக்கும்.
தலைவர்கள் மரணம்
எட்டாம் வீட்டிற்குறிய குரு பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு பார்வை பெற்று உச்சம் பலத்துடன் நிற்கிறார். எனவே வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வாகன விபத்துகள் அதிகமாகும். புகழ் பெற்றவர்கள் மற்றும் தலைவர்கள் காலமாவார்கள்.
No comments:
Post a Comment