தென்கொரியாவில் 70 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ராணுவ முகாம் மூடல்
தென்கொரியா நாட்டில் அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் முகாம், சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டுள்ளது
தென்கொரியாவின் சியோல் நகரில், அமெரிக்காவின் ராணுவ முகாம் ஒன்று 2ஆம் உலகப் போரின் போது அமைக்கப்பட்டது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை போன்றவற்றால் தென்கொரியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில், இந்த முகாமில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் தென்கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
மேலும், இருநாட்டு ராணுவத்தினரும் இணைந்து பல்வேறு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், டிரம்ப்-கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வடகொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தென் கொரியாவின் Pyeongtaek நகரில், அமெரிக்க ராணுவம் புதிய தலைமையகத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக சியோல் நகரில் செயல்பட்டு வந்த ராணுவ முகாமை அமெரிக்கா மூடியுள்ளது.
No comments:
Post a Comment