மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு
கிழக்கு மகாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில், இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். தற்போது இவ்வைத்தியசாலையில், தலசீமியா நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இத்தட்டுப்பாட்டுக்கான என்றும் அவர் கூறினார். 'வழமையாக டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே இத்தகைய இரத்த தட்டுப்பாடு ஏற்படுவது வழமையாகும். இரத்ததான முகாம்கள் நடைபெறுவரும் இரத்த தானம் செய்வதும் குறைவடைந்துள்ளது. இக்குறைப்பாட்டை போக்க முடிந்தவர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்' என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment