Saturday, 24 January 2015
Friday, 23 January 2015
வந்தாறுமூலையில் இன்று புதிர் எடுக்கும் வைபவம்
வந்தாறுமூலை விவசாய பெருமக்களால் காலங்காலமாக மேற்கொள்ளபடும் புதிர் எடுக்கும் வைபவம் இன்று காலை நடைபெற்று ஆலயங்களுக்கு புதிர் நெல் கொண்டு செல்லப்பட்டது அங்கு பொது மக்களுக்கு புதிர் நெல் வழங்கப்பட்டது.மற்றும் இன்று வந்தாறுமூலை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது.Thursday, 22 January 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதியை சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசர அழைப்பினையேற்று இன்று (22.01.2014) தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் இச் சந்திப்பானது ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் இதன்போது கிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலையினை தீர்ந்து வைக்கும் முகமாக ஜனாதிபதி இல் அழைப்பினை விடுத்திருக்கலாமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது பிறந்த தினம்
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது வருட பூர்த்தி தினம் கடந்த 18.01.2015 (ஞாயிறு) அன்று அனுஸ்டிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கேக் வெட்டி சிறப்பித்தனர்.
Wednesday, 21 January 2015
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு
கிழக்கு மகாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில், இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். தற்போது இவ்வைத்தியசாலையில், தலசீமியா நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இத்தட்டுப்பாட்டுக்கான என்றும் அவர் கூறினார். 'வழமையாக டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே இத்தகைய இரத்த தட்டுப்பாடு ஏற்படுவது வழமையாகும். இரத்ததான முகாம்கள் நடைபெறுவரும் இரத்த தானம் செய்வதும் குறைவடைந்துள்ளது. இக்குறைப்பாட்டை போக்க முடிந்தவர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்' என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.