Monday, 10 August 2015

Vantharumoolai News

மட்டக்களப்பு நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்பு இனம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளமாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். 45 வயது மதிக்கத்தக்க சடலமானது வாவியின் நீரோட்டம் காரணமாக கோட்டைக்கு முன்பாக நீரினுள் உள்ள பாரிய கல்லொன்றில் தங்கி இருந்ததாகவும் பொலிசாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்காக மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பின்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பவுள்ளதாகவும், குற்றம் நடந்த இடத்தை விசாரணை செய்யும் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

(http://www.battinews.com)
Vantharumoolai News

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்குச் சந்தரப்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (11.08.2015) காலை 8.30 மணிமுதல் மாலை 2.30 மணிவரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான சறோஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே குறித்தொதுக்கப்பட்ட தினங்களில் தமது அஞ்சல் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் கிடைக்காத அஞ்சல் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைக் கடமைகள் பொறுப்பளிக்கப்பட்டதன் காரணமாக வாக்களிக்க முடியாமற் போகும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள்; 14ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையில் அஞ்சல் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரையில் அஞ்சல் வாக்களிக்காத அஞ்சல் வாக்காளர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 9842 பேர் தகுதி பெற்றவர்களாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தபால் மூல வாக்களிப்புக்காக மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் 176 நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தபால் மூல வாக்களிப்பிற்கு 3ஆம் திகதியும், 5, 6ஆம்திகதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் குறிப்பிட்டளவான அஞ்சல் வாக்குகள் இன்னமும் அளிக்கப்படாமலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எமது தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும், பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேருமாக மொத்தம் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடாவில் 115 நிலையங்களும்,    மட்டக்களப்பில் 199 நிலையங்களும், பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் என்ற அடிப்படையில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.
(http://www.battinews.com/)

Sunday, 9 August 2015

Vantharumoolai News

மகளிர் இல்லமாணவிகளுக்கு அன்னதானம்

சுவீஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டினால் சித்தாண்டி யோக சுவாமி சைவ மகளிர் இல்ல மாணவிகளுக்கு  அன்னதானம் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவீஸ் உதயம் அமைப்பின் செயலாளர் வே.ஜெயக்குமாரின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது
அத்தோடு அச் சிறுவர் இல்லத்திற்கு இவ் அமைப்பின் ஏற்பாட்டில் பழுதடைந்து இருந்த மலசலகூடங்களையும் குளியலறையையும் செப்பனிட்டுக் கொடுத்துள்ளனர் இதற்கான நிதி உதவியை சுவீஸ்லாந்து விண்டர் தூர் திரு திருமதி சிவதர்சினி சிவராசா வழங்கிவைத்துள்ளனர்

இந்த நிகழ்வில் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தலைவர் அ.விநாயகமூர்த்தி சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணத் தலைவர் மு.விமலநாதன் பிரதித்தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்

Friday, 7 August 2015

Vantharumoolai News

தையல் கலையில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பாடநெறிப் பயிற்சிகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்களின் தையல் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்களின் தையல் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.சிங்கர் கல்விச் சேவைகள் உதவி முகாமையாளர் காஞ்சனா செனானி பெரேரா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் தையல் கலை பாடநெறிகள், டிசைனர் பாடநெறிகள் பற்றி சிங்கர் பெஷன் அக்கடமியின் விரிவுரையாளர்களான சுகன்யா கணேசன், எல். சிந்துஜா ஆகியோர் வகுப்புக்களை  நடாத்தியதோடு செயல்முறைகளையும் செய்து காண்பித்தனர்.