Monday, 10 August 2015

Vantharumoolai News

மட்டக்களப்பு நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்பு இனம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளமாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். 45 வயது மதிக்கத்தக்க சடலமானது வாவியின் நீரோட்டம் காரணமாக கோட்டைக்கு முன்பாக நீரினுள் உள்ள பாரிய கல்லொன்றில் தங்கி இருந்ததாகவும் பொலிசாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்காக மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பின்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பவுள்ளதாகவும், குற்றம் நடந்த இடத்தை விசாரணை செய்யும் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

(http://www.battinews.com)
Vantharumoolai News

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்குச் சந்தரப்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (11.08.2015) காலை 8.30 மணிமுதல் மாலை 2.30 மணிவரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான சறோஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே குறித்தொதுக்கப்பட்ட தினங்களில் தமது அஞ்சல் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் கிடைக்காத அஞ்சல் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைக் கடமைகள் பொறுப்பளிக்கப்பட்டதன் காரணமாக வாக்களிக்க முடியாமற் போகும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள்; 14ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையில் அஞ்சல் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரையில் அஞ்சல் வாக்களிக்காத அஞ்சல் வாக்காளர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 9842 பேர் தகுதி பெற்றவர்களாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தபால் மூல வாக்களிப்புக்காக மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் 176 நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தபால் மூல வாக்களிப்பிற்கு 3ஆம் திகதியும், 5, 6ஆம்திகதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் குறிப்பிட்டளவான அஞ்சல் வாக்குகள் இன்னமும் அளிக்கப்படாமலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எமது தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும், பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேருமாக மொத்தம் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடாவில் 115 நிலையங்களும்,    மட்டக்களப்பில் 199 நிலையங்களும், பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் என்ற அடிப்படையில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.
(http://www.battinews.com/)

Sunday, 9 August 2015

Vantharumoolai News

மகளிர் இல்லமாணவிகளுக்கு அன்னதானம்

சுவீஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டினால் சித்தாண்டி யோக சுவாமி சைவ மகளிர் இல்ல மாணவிகளுக்கு  அன்னதானம் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவீஸ் உதயம் அமைப்பின் செயலாளர் வே.ஜெயக்குமாரின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது
அத்தோடு அச் சிறுவர் இல்லத்திற்கு இவ் அமைப்பின் ஏற்பாட்டில் பழுதடைந்து இருந்த மலசலகூடங்களையும் குளியலறையையும் செப்பனிட்டுக் கொடுத்துள்ளனர் இதற்கான நிதி உதவியை சுவீஸ்லாந்து விண்டர் தூர் திரு திருமதி சிவதர்சினி சிவராசா வழங்கிவைத்துள்ளனர்

இந்த நிகழ்வில் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தலைவர் அ.விநாயகமூர்த்தி சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணத் தலைவர் மு.விமலநாதன் பிரதித்தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்

Friday, 7 August 2015

Vantharumoolai News

தையல் கலையில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பாடநெறிப் பயிற்சிகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்களின் தையல் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்களின் தையல் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.சிங்கர் கல்விச் சேவைகள் உதவி முகாமையாளர் காஞ்சனா செனானி பெரேரா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் தையல் கலை பாடநெறிகள், டிசைனர் பாடநெறிகள் பற்றி சிங்கர் பெஷன் அக்கடமியின் விரிவுரையாளர்களான சுகன்யா கணேசன், எல். சிந்துஜா ஆகியோர் வகுப்புக்களை  நடாத்தியதோடு செயல்முறைகளையும் செய்து காண்பித்தனர்.

Monday, 20 April 2015

Vantharumoolai News

தேனீகளின் தக்குதலுக்கு இலக்காகிய மாணவனும் கவனமில்லாத ஆசிரியர்களும்

வளத்து வரும் பாடசாலைகளில் இப்பொழுது மாணவர்களின் மீதுவுள்ள கவனம் ஆசிரியர்களுக்கு குறைந்து வருகிறது அதற்கு சான்றாக வந்தாறுமூலையில் உள்ள மட்/வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் தரம்9 இல் கல்வி கற்கும் கு.கரிப்பிரசாத் என்கின்ற மாணவன் இன்று பாடசாலையை சுத்திகரிப்பதட்காக சென்றபொழுது தேனீ கொட்டுகளுக்கு இலக்காகிவுள்ளான்.இவ்மா ணவனன் மீது ஆசிரியர் எவருமே கவனம் எடுக்கவில்லை.அவ் மாணவனை சக பாடசாலை மாணவர்களே அவ் மாணவனுடைய வீட்டில் விட்டுசென்றுள்ளனர் பின் அவ் மாணவனின் குடும்பத்தார் அவ் மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர். கல்வியில் எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் அலச்சைய போக்கு இன்னும் தொடர்கிறது.

Wednesday, 15 April 2015

Vantharumoolai News

மன்மத வருட பிறப்பை முன்னிட்டு வந்தாறுமூலை ஆலயங்களில் விசேட வழிபாடுகள்

மன்மத வருட பிறப்பை முன்னிட்டு வந்தாறுமூலை நிர்முக விநாயகர் ஆலயம்,வந்தாறுமூலை விஸ்ணு ஆலயம்,வந்தாறுமூலை மருங்கையடி விநாயகர் ஆலயம் ,சித்தாண்டி முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன.

(புகைப்படம்-WWWW.Battinews.com)

Tuesday, 14 April 2015

Vantharumoolai News

இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் இனிய Vantharumoolai News வாசகர்களே உங்களுக்கு இன்று பிறக்கும் மன்மத வருட சித்திரை புத்தாண்டு இனிதாக இருக்கும் படியும் இவ் வருடத்தில் பல வெற்றி குவியதிடும் படியும் இறைவனை பிராட்டிகிறேன் .உங்களுக்கு Vantharumoolai News இன் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, 13 April 2015

Vantharumoolai News

மன்மத வருட சிறப்புகள் பலன்கள்

உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஆண்டுகள் எண்களின் அடிப்படையில் தான் அறியப்படுகிறது. ஆனால் தமிழில் மட்டுமே ஆண்டுகளுக்கு பெயர்கள் வழங்கப்படுகிறது. தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உண்டு. சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆங்கில தேதியில் சுமார் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு நிகழும். இவ்வாண்டு 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இவ்வாண்டு பிறக்கும் தமிழ் ஆண்டானது தமிழ் ஆண்டுகளின் வரிசையில் இருபத்து ஒன்பதாவது வருடம் ஆகும். இப்புத்தாண்டின் பெயர் மன்மத வருடம் ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் இடைக்காட்டுச் சித்தர் எழுதிய பாடல்களைக் கொண்டு அந்த வருடத்தின் பலன் அறியப்படுகிறது.

மன்மத வருடத்திய வெண்பா மன்மதத்தின் மாரியுண்டு வாழமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளும் நண்ணுமே – மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் காண் இதன் பொருள் என்னவென்றால் மன்மத வருடத்தில் நல்ல மழையுண்டு. எல்லா உயிரினங்களும் நன்றாக சுகமாக வாழும். நன்மைகள் அதிகரிக்கும். எல்லாவிதமான பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் மேலும் அவை எளிதாகக் கிடைக்கப் பெறும். சீனாவில் அரசாளும் அதிகார வர்க்கத்தினரால் சண்டை சச்சரவு உண்டாகும். தெற்கு திசையிலிருந்து அதிகமாக காற்றடித்து காட்டுப் பயிர்களின் விளைச்சல் குறையும்.

மன்மத வருடப் பிறப்பன்று உள்ள கிரக நிலை பின்வருமாறு:


மன்மத வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி – 14-04-2015 செவ்வாய் கிழமை கிருஷ்ணபட்சம் தேய்பிறை தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் சுபம் நாமயோகம் பத்திரை கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 01-47 மணியளவில் சிம்மம் லக்கினத்தில் மன்மத வருடம் பிறக்கிறது.

மன்மத வருடத்தின் பொது பலன்கள்

வருடப் பிறப்பின் லக்கினம் சிம்மம். லக்கினாதிபதி சூரியன் ஒன்பதாவது வீட்டில் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவகத்திற்கு அதிபதியான செவ்வாயுடனும் தன லாபாதிபதி புதனுடனும் சேர்க்கை பெற்று பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே இவ்வாண்டு நாட்டில் தெய்வீக நம்பிக்கை அதிகமாகும், பொருளாதாரம் சிறக்கும், மருத்துவம், இயந்திரம் வணிகம் மற்றும் தொலைதொடர்பு போன்ற துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். லக்கினம் சனியின் பார்வை பெறுவதால் நாட்டின் மேற்கண்ட பலன்கள் சற்று தாமதமாக நடைபெறும்.

தனிநபர்களின் வருமானம்

இரண்டாம் வீட்டிற்குறிய புதன் லக்கினாதிபதி சூரியனுடனும் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவகத்திற்கு அதிபதியான செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சமம் பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே பாரம்பரிய கலைகள் வளர்ச்சி பெறும் தனிமனித வருமானம் அதிகரிக்கும். குடும்பஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு அமர்ந்து கேது பார்வை பெறுவதால் குடும்பத்தில் குழப்பங்கள் பிரிவினைகள் அதிகரிக்கும்.

தொழில் விருத்தி

மூன்றாம் வீட்டிற்குறிய சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் தொழில் விருத்தியடையும், புதுவிதமான ஆடம்பரப் பொருட்களின் பயன்பாடும் ஆடம்பரமும் அதிகரிக்கும். சுக்கிரன் சனி மற்றும் கேது பார்வை பெற்று இருப்பதால் பொன்னகைகளின் திருட்டு அதிகரிக்கும்.

நீர்நிலைகள் நிறையும்

நான்காம் வீட்டிற்குறிய செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் லக்கினாதிபதி சூரியன் தன லாபாதிபதி புதன் ஆகியோருடன் கூடி ஆட்சி பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே புதுவிதமான மாடமாளிகைகள் வாகனங்கள் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும் கல்விதுறை மேன்மையடையும். நான்காமிடத்தில் வக்கிர சனி இருந்து நான்காமிடம் செவ்வாய், ராகு மற்றும் குரு பார்ப்பதால் நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகரிக்கும் விவசாயம் செழிப்பு பெறும் ரியல் எஸ்டேட் வியாபாரம் மந்தமாகும். வாகன விபத்துகளும் அதிகரிக்கும்.

சுற்றுலாத்துறை வளர்ச்சி

ஐந்தாம் வீட்டிற்குறிய குரு பன்னிரெண்டாமிடத்தில் உச்சம் பலம் பெற்று அமர்ந்துள்ளார். எனவே நம் நாட்டின் பாரம்பரிய கலைகளுக்கு வெளிநாட்டில் வரவேற்பு அதிகரிக்கும் உயர்கல்வி மேன்மை பெறும். குரு சந்திரன் யோகம் இருப்பதால் சுற்றுலா துறை வளர்ச்சியடையும். குருவுக்கு செவ்வாய் மற்றும் ராகுவின் பார்வை இருப்பதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும் மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் திருடப்படும் அபாயமும் உண்டு.

புதுவகை நோய்கள்

ஆறாம் வீட்டிற்குறிய சனி நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, சுக்கிரன் மற்றும் குருவின் பார்வைபெற்று பகை நிலையில் நிற்கிறார் மேலும் ஆறாமிடத்தை கேது பார்க்கிறார். எனவே ரசாயனப் பொருட்கள் மற்றும் புது வகை கிருமிகளால் புது வகை நோய் பரவும் அபாயமுண்டு. ஆறாமிடத்தில் சந்திரன் இருப்பதும் சுக்கிரன் சனியை பார்ப்பதும் குரு ஆறாமிடத்தையும் ஆறாமிடத்து அதிபதி சனியையும் பார்ப்பதால் எந்த நோயானாலும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோய்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். நோயின் பாதிப்புகள் பெரிதாக இருக்காது.

தம்பதிகள் பிரச்சினை

ஏழாம் வீட்டிற்குறிய சனி நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, சுக்கிரன் மற்றும் குருவின் பார்வைபெற்று பகை நிலையில் நிற்கிறார். எனவே காதல் திருமணங்கள் அதிகம் நடைபெரும். நீண்ட காலம் தடைபட்ட திருமணம் கைகூடிவரும். தம்பதிகளுக்கிடையே பிரச்சினைகளும் பிரிவினைகளும் அதிகரிக்கும்.

தலைவர்கள் மரணம்

எட்டாம் வீட்டிற்குறிய குரு பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு பார்வை பெற்று உச்சம் பலத்துடன் நிற்கிறார். எனவே வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வாகன விபத்துகள் அதிகமாகும். புகழ் பெற்றவர்கள் மற்றும் தலைவர்கள் காலமாவார்கள்.

Thursday, 26 February 2015

VantharumoolaiNews

தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா,எம்பெக் சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை நேற்றையதினம் புதன்கிழமை (25) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு, இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான நிலைமைகள் மற்றும் நல்லாட்சி நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதேவேளை இச்சந்திப்பின்போது கல்முனைத் தொகுதியில் கிட்டங்கி பாலம் தொடக்கம் சாய்ந்தமருது தோனா வரை வடிகாலமைப்பு அபிவிருத்திக்கு தென் ஆபிரிக்கா உதவ முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்வைத்த வேண்டுகோள் அந்நாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் உள்ளிட்ட ராஜதந்திரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்(தொகுப்பு :-http://www.battifm.com/).

Wednesday, 18 February 2015

Vantharumoolai News

காணாமற்போன வாலிபர் பாலத்தின் கீழ் சடலமாக மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போனதாகக் கருதப்படும் வாலிபர் ஒருவரது சடலம்  செங்கலடி கறுத்தப்பாலத்தின் கீழ்  இன்று 18.02.2015  புதன்கிழமை காலை  மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
உருக்குலைந்து துர்வாடை வீசிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் கொம்மாதுறை உமா மில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடைய சுந்தரம் மகேந்திர ராஜா என்பவருடையதென்றும் இவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவரெனவும்   அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். ஏறாவூர்ப் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Vantharumoolainews

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அன்மையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவரவதாவது;

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரை பயன்படுத்தி பல்கலைகழகத்திற்குள் இருப்பவர்களை சிலர் அவமானப்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாக இன்று கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தள்ளனர்.இது குறித்து கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் வெளியிட்டள்ள அறிக்கையிணை கீழே இணைத்துள்ளோம்

அன்பார்ந்த பொது மக்களே! புத்திஜீவீகளே! மாணவ, மாணவிகளே!

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது யாருடைய தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவோ மழுங்கடிக்கவோ முன்னெடுக்கப்பட்ட தொன்றல்ல.

சகலருக்கும் தெரியும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு எமது  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் உபவேந்தர் பதவியிலும் மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒரு பகுதியினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி இன்ரநெட், பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்கள் அறியாத விடயமன்று. இருப்பினும் கடந்த 09.02.2015 அன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற பல்கலைக்கழக சமூகமும் பொது மக்களும் என்ற போர்வையில் முன்னெடுத்து செல்லப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் சகலரையும் திரும்பிப் பார்க்க செய்ததை யாவரும் அறிவீர்கள்.

பல்கலைக்கழக சமூகம் என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இருப்பினும் 329 அங்கத்தவர்களை கொண்ட எமது ஊழியர் சங்கமானது அதில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவிடத்து பல்கலைக்கழக சமூகம் என்ற பதத்தினை பாவித்ததானது பல்கலைக்கழகத்தில் பொறுப்புள்ள சங்கம் என்ற வகையில் எமக்கு விசனமளிகின்றது.

அத்தோடு அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எமது மனக்கசப்பினை காட்டுவதற்கும், அநாகரீகமான முறையில் எழுதப்படும் மொட்டை கடிதங்களுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாகவும்  இன்றைய இந்த கறுப்பு பட்டி அணிந்த மௌன போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டியவர்கள் பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் “காமுகர்களிடமிருந்து எமது பெண்களை காப்பாற்று” போன்ற சுலோகங்களை ஏந்தி கூறியமையானது கிழக்கின் சொத்தென கூறும் எமது பல்கலைக்கழகத்தையும் அங்கு பணியாற்றும் கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பெண் ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகள் என்ற அனைவரையும் வெளிச்சமூகத்தில் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு பார்க்கவைக்கும் என்பதை கூறிக்கொள்வதோடு இவ்வாறான செயற்பாடுகளில் “பல்கலைக்கழக சமூகம்” என்ற பதத்தினை பயன்படுத்தியமைக்கும் எமது ஊழியர் சங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதையும் கூறி இவ்வாறான செயலிற்கு நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.

மேலும் 30வருடகால யுத்தத்தின் பின்னர் நிறைவேற்று அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு சகல நடவடிக்கைகளும் சீர்செய்யப்பட்டு நிதிப் பிரமாணங்களுக்கும் சட்டதிட்டங்களுக்கும் ஏற்ப வெளியிலுள்ள சில திணைக்கள தலைவர்களையும் உள்ளடக்கிய ஒரு அங்கிகரிக்கப்பட்ட குழுவினால் சகல விலை மனுக்கோரல்களும் இடம்பெற்றே பொருள் கொள்வவனவு இடம்பெறுகின்றது. எனவே ஊழல்கள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எமது சங்கமும் பல்கலைக்கழக சமூகம் என்ற ரீதியில் அதற்கெதிராக குரல் கொடுப்போம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

எமது பல்கலைக் கழகத்தற்தின் வளர்ச்சியை முடக்கும் வகையில் ஒரு சிலரால் உபவேந்தரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தியும் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்களையும் எமது சங்கத்தை பொறுப்புள்ள வகையில் கொண்டு செல்லக்கூடிய எமது சங்க நிருவாகிகளுக்கும் தனிப்பட்டரீதியில் அவர்களது பெயரைக்குறிப்பிட்டு கையாலாகாத்தனமாக இன்ரநெட்களிலும் மொட்டைக் கடிதங்களிலும் அநாகரிகமான முறையில்; இழிவுபடுத்தி எழுதுபவர்களை அவற்றை எழுதுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வதோடு அதனை வன்மையாகவும் கண்டிக்கின்றோம்.

மற்றும் நாம் எந்த தொழில்சங்கத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.
எமது சங்கத்திற்கும் உபவேந்தர் மற்றும் நிருவாகத்தினருடனும் முரண்பாடுகள் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் சுமுகமாகவும் புத்தி சாதுரியமாகவும் அவர்களுடன் பேசி எமது பிரச்சனைகளை அவ்வப்போது முடிவுறுத்திக் கொள்வோம். அதே போன்று கடந்த காலங்களில் பதவி வகித்துச்சென்ற உபவேந்தர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டனர் என்ற சரித்திரம் எமது சங்கத்திற்கு கிடையாது. 

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் யார் உபவேந்தராக பதவி வகித்தாலும் குறிப்பிட்ட தனிமனிதருக்கென்றல்லாது அக்காலங்களில் பதவி வகித்துச் சென்ற உபவேந்தர்களுக்கு எமது சங்கம் முழு ஆதரவினையும் வழங்கி வந்தது. இதை யாரும் மறுக்கமுடியாது. அதே போன்று தற்போதும் எமது சங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இனிமேலும் வழங்குவோம் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்(செய்தி-www.battinews.com/).